பிரேமம் மலர் டீச்சர் வேடத்துக்கு முதல் சாய்ஸ் இந்த பிரபல நடிகைதானாம்… பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பகிர்ந்த தகவல்!

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (07:11 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அறிமுகமான அனுபமா, சாய் பல்லவி மற்றும் மடோனா ஆகிய மூவருமே இன்று முன்னணி நடிகைகளாக உள்ளனர்.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்காமல் கடைசியில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் ஒரு இணையதள சேனலுக்கு அளித்த சமீபத்தைய நேர்காணலில் பிரேமம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “பிரேமம் படத்தில் அந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை அசினைதான் நடிக்க வைக்கவேண்டும் என நினைத்திருந்தோம். இதற்காக நிவின் பாலி அசினிடம் பேசுவதாக சொல்லி இருந்தார். ஆனால் அது சில காரணங்களால் நடக்காமல் பின்னர் சாய்பல்லவி தேர்வானார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்