எனக்கு ஆறுதல் சொல்ல 4 மணி நேரம் காத்திருந்தார் அஜித்: கலைப்புலி எஸ் தாணு

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (19:08 IST)
அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற ஒரே படத்தை மட்டுமே தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தை அடுத்து அஜித்தை வைத்து படம் எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் அந்த படத்தை எனக்கும் அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட ஒருசிறு கருத்துவேறுபாடு காரணமாக தயாரிக்க முடியாமல் போய்விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அஜித்தை போன்ற ஒரு நல்ல மனிதரை தான் பார்த்ததில்லை என்றும் தனது மனைவி காலமானபோது தான் சிஙகப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்ததாகவும், நான் வரும் வரை சுமார் நான்கு மணி நேரம் எனக்காக காத்திருந்து அஜித் தனக்கு ஆறுதல் கூறியதாகவும், அதுவும் இந்த விஷயம் கேள்விப்பட்டு அவரும் அவருடைய மனைவியும் மோட்டார் பைக்கில் என்னுடைய வீட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.
 
எனவே அஜித் படத்தை தயாரிக்காவிட்டாலும் அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் நபராக அவருக்கு ஆதரவாக நான் நிற்பேன் என்றும் கலைப்புலி எஸ்.தாணு உறுதியளித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்