விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

vinoth
புதன், 1 ஜனவரி 2025 (00:14 IST)
அஜித் நடிப்பில்மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் தாய்லாந்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு பாடல் காட்சியோடு நிறைவடைந்தது. இதையடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘Sawadeeka’ சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி வைரலாகி வருகிறது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள். “ எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தயாரிப்பு தரப்பால் அறிவிக்கப்படவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்