ஹீரோயின் ஆன அஜித்தின்'' ரீல்'' மகள்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:22 IST)
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் ரீல் மகளான அனிகா  ‘’ஓ மை டார்லிங்’’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில், கவுதம் மேனன் இயககத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் என்னை அறிந்தால். இப்படத்தின்  நடிகர் அஜித்குமாரின் மகளான குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் அனிகா.

இவர்,  ஏற்கனவே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நநடித்திருந்தாலுல் அஜித்தின் மகளான நடித்தபின் எல்லோராலும் அறியப்பட்டார்.

இந்த நிலையில், அனிகா ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள ஓ மை டார்லிங் படத்தில் ஆல்பிரட் டி சாமுவேல் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார்.  இவர்களுடன் இணைந்து,முகேஷ் . மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். இதனால் இப்படடத்திற்கு பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்