சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது: தமன்னா ஆதங்கம்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:46 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே இல்லை என கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சிம்ரன் ஜோதிகாவை அடுத்து ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ் திரைப்பட உலகில் வெள்ளை அழகி என இவரை ரசிகர்கள் அழைத்து வருவதுண்டு. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா சினிமாவில் நாயகிகளுக்கு மதிப்பே கிடையாது என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் 
 
சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை என்றும் பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாகக் கூட சினிமாக்காரர்கள் மதிக்க மாட்டார்கள் என்றும் கதாநாயகருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதி கூட கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த போக்கு ஆரம்பத்தில் இருந்தே தொடர்கிறது என்று கூறிய தமன்னா, கதாநாயகிகள் புகைப்படம் போஸ்டர்களில் வருவதே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
தமன்னாவின் இந்த ஆதங்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்