இன்னும் கார் ரேஸ மறக்காத அஜித்… வைரலாகும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (15:05 IST)
அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக நேற்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. ஒரு மாதம் அங்கு நடக்கும் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் முடிகிறது. இதையடுத்து படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பொதுவாக ஊடகங்களிலோ அல்லது சமூலவலைதளங்களிலோ தலைகாட்டுவதில்லை. ஆனால் அவரின் புகைப்படங்கள் எப்படியாவது சமூகவலைதளங்களில் பரவியவண்ணம் உள்ளன.

இந்நிலையில் தாய்லாந்தில் நடக்கும் வலிமை ஷூட்டிங்கில் அஜித்தோடு நடித்து வரும் பிக்பாஸ் அமீர் அஜித்தோடு எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை அஜித் அமீருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார். வாட்ஸ் ஆப் டிபியில் அஜித் கார் ரேஸில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கலந்துகொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைதான் தன்னுடைய புரொபைல் புகைப்படமாக வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்