அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த பிக்பாஸ் நட்சத்திரங்கள்!

சனி, 8 அக்டோபர் 2022 (12:22 IST)
அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த பிக்பாஸ் நட்சத்திரங்கள்!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அமீர் மற்றும் பாவனி ஆகியோர் இணைந்து உள்ளதாகவும் தாய்லாந்து படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியானதும் 
 
அதேபோல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான சிபி சக்கரவர்த்தி இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் அஜித்துடன் அமிர், பாவனி மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து மூவரும் இந்த படத்தில் நடித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்