சுரேஷ் சந்திரா அறிவித்த 1.09 மணி அஜித் பட அப்டேட் இதுதான்..! ரசிகர்கள் ஏமாற்றம்..!

Mahendran
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (14:24 IST)
அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மாறி மாறி நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இன்று தனது சமூக வலைத்தளத்தில் 1.09   மணிக்கு புதிய அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து அஜித்தின் விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஏதோ ஒரு படத்தின் அப்டேட் வரப்போகிறது என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் சரியாக ஒன்று 1.09  மணிக்கு வந்த அப்டேட்டில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நிகில் நாயர் நடித்து உள்ளதாக அறிவித்து அதற்கான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்கள் அஜித் படத்தில் வேறொரு நடிகர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதுவும் எல்லோருக்கும் தெரிந்த தகவலை வெளியிட்டு இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

  அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்