கூலி vs குட் பேட் அக்லி… மீண்டும் ரஜினியோடு மோதும் அஜித்!

vinoth

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (09:19 IST)
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்தோடு சுனில் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸும் பின்தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி தள்ளிவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதே தேதியில்தான் ரஜினியின்  ‘கூலி’ திரைப்படமும் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்