தலயுடன் குட்டித் தல ஆத்விக்..! – வைரலாகும் அஜித் மகன் புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (10:52 IST)
நடிகர் அஜித்துடன் அவர் மகன் ஆத்விக் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித் – இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல், மோஷன் போஸ்டர் போன்றவை சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அஜித்தின் பைக் ரைடிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் மகன் ஆத்விக் தலையில் ஹெல்மெட் மாட்டியபடி அஜித்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அஜித்துடன் விரைவில் ஆத்விக்கும் பைக் பயணம் செல்ல உள்ளாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்