விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்?? – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:27 IST)
அஜித் குமாரின் 62வது படம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வரும் நிலையில் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் – எச்.வினோத் கூட்டணியில் சமீபத்தில் வலிமை படம் வெளியாகி வசூலை குவித்துள்ளது. இதையடுத்து அஜித்தின் 61வது படமும் எச்.வினோத் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதை தொடர்ந்து அஜித்தின் 62வது படம் குறித்த ஊகங்களும் எழுந்துள்ளன.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், நயன்தாரா மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்க அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்