AK 61 அடுத்த கட்டப் படப்பிடிப்பு எங்கே… வெளியான தகவல்!

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (10:32 IST)
நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படத்தை ரசிகர்கள் AK 61 என அழைத்து வருகின்றனர்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்ட படப்பிடிப்பை பூனேவில் இயக்குனர் வினோத் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் முழுப் படப்பிடிப்பும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்