அஜித்துடன் நடிகை நாயனா சாய்… இணையத்தில் வைரலான ‘AK 61’ செட் புகைப்படம்!

திங்கள், 6 ஜூன் 2022 (08:56 IST)
நடிகை நாயனா சாய் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர அது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. அதற்காக போடப்பட்ட வங்கி செட்டில் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அஜித்துடன் நடிகை நாயனா சாய் இருக்கிறார். இந்த புகைபடத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அஜித் 61 படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டு உள்ளதால் படத்தில் நாயனாவும் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்