இது உண்மையிலேயே அஜித் படம்தானா…? அப்டேட்டாகக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு!

vinoth
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:22 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முடிந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதோடு மொத்த ஷூட்டிங்கும் முடியவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அஸர்பைஜானுக்கு ஒருவாரம் ஷூட்டிங் செல்ல வேண்டும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளாராம்.

வழக்கமாக அஜித் படம் என்றால் அப்டேட்டே வராமல் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் புலம்பித் தள்ளுவார்கள். வலிமை படத்தின் அப்டேட்டை எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் சென்றார்கள். ஆனால் விடாமுயற்சி படக்குழுவோ ஒரு வாரத்துக்கு இரண்டு அப்டேட் என தந்து கொண்டிருக்கிறது. இன்று மதியம் 1.09 மணிக்கு படத்தின் அடுத்த அப்டேட் வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. என்ன அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்