உடை பற்றி அத்துமீறி கமெண்ட் செய்த நபர்.. கமெண்ட்டிலேயே பதில் சொல்லி சைலண்ட் ஆக்கிய ஐஸ்வர்யா லஷ்மி!

vinoth
ஞாயிறு, 12 ஜனவரி 2025 (09:29 IST)
ஐஸ்வர்யா லஷ்மி தனது தாய்மொழியான மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அதையடுத்து தமிழில் அவருக்கான வாய்ப்பு விஷால் நடித்த ஆக்‌ஷன் படம் மூலமாக வந்தது. அந்த படத்தில் அவருக்கு மிகச்சிறிய வேடமே. அவரை கவனிக்கத்தக்க நடிகையாக்கியது பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்கள். இப்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் தக்லைஃப் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மருத்துவம் படித்த ஐஸ்வர்யா லஷ்மி எதேச்சையாக சினிமாவில் நுழைந்து இன்று நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வரும் இவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் அவர் பகிர்ந்திருந்த ஒரு புகைப்படத்துக்கு ரசிகர் ஒருவர் “நீங்கள் இந்த ட்ரஸ்ஸில் நன்றாக உள்ளீர்கள். ஆனால் முழு ட்ரஸ் அணிந்தால் இன்னும் நன்றாக இருப்பீர்கள்’ எனக் கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்த ஐஸ்வர்யா “சார் ப்ரோ, அடுத்த தடவை கண்டிப்பாக முழு உடையணிந்து புகைப்படம் எடுத்துப் பகிர்கிறேன்” என நக்கலாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த கமெண்ட் ஆசாமி சைலண்ட் ஆகி எஸ்கேப் ஆனார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்