திருப்பதியில் அஜித் தரிசனம் - வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (14:17 IST)
விவேகம் படப்பிடிப்பை முடித்த அஜித் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.


 

 
விவேகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் முதல்முறையாக சிக்ஸ் பேக் உடன் களமிறங்கியுள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும் இறுதி கட்ட வேலைகள் நடைப்பெற்று வருவதாகவும் இயக்குநர் சிவா அண்மையில் தெரிவித்தார்.
 
இந்நிலையில் நடிகர் அஜித் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். தற்போது அவர் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. மேலும் அஜித் திருப்பதி செல்வது இது முதல்முறையல்ல. அவர் அடிக்கடி திருப்பதி சென்று தரிசனம் செய்து வருகிறார். ஆனால் தற்போது அஜித் தல என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் ஆழமான வேர் ஊன்றி நிற்கிறார். இதனால் தற்போது அவர் எதை செய்தாலும், எங்கு சென்றாலும் அது வைரலாகி விடுகிறது.
அடுத்த கட்டுரையில்