அட்லியை அடுத்து பாலிவுட் செல்லும் இன்னொரு பிரபல இயக்குனர்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (17:59 IST)
விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் அட்லியை அடுத்து மேலும் ஒரு தமிழ் இயக்குனர் பாலிவுட் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் அபிஷேக் பச்சனை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும் அந்த அட்டகாசமான ஆக்ஷன் கதையை கேட்டு அசந்து போன அபிஷேக் பச்சன் உடனடியாக படத்தை தொடங்கலாம் என்று கூறி தயாரிப்பாளரையும் பிக்ஸ் செய்துவிட்டதாகவும் தெரிகிறது 
 
இதனையடுத்து அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் இயக்குனர் லிங்குசாமி தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பெரும்பாலான தமிழ் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்