இழுபறியில் ‘பூமி’ கதைப்பிரச்சனை: முடித்துவைப்பாரா பாக்யராஜ்?

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (17:56 IST)
ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தற்போது விசாரணை செய்து வருகிறார் 
 
உதவி இயக்குனரின் கதையை முழுமையாக படித்த இயக்குனர் பாக்யராஜ், பூமி படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் ‘பூமி’ படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே தன்னால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இயக்குனர் உங்களை சந்திப்பார் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இயக்குனரை தொடர்பு கொண்ட பாக்யராஜ் பூமி படத்தின் ஸ்கிரிப்ட்டை கொடுங்கள் என்று கேட்டபோது அந்த ஸ்கிரிப்ட் தற்போது இல்லை எனவும் வேண்டுமானால் நேரில் வந்து முழு கதையையும் கூறுகிறேன் என்று இயக்குனர் கூறியதாக தெரிகிறது
 
ஆனால் பாக்யராஜ் அதற்கு மறுத்துவிட்டதாகவும் ஸ்கிரிப்டை மீண்டும் தயார் செய்து கொடுங்கள் என பாக்யராஜ் கூறியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பூமி படத்தின் கதை பிரச்சனைக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பாக்யராஜூக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் பாக்யராஜ் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்