சுஷாந்துக்காக போதை பொருட்களை வாங்கினாரா ரியா? நடிகை டாப்ஸி விளக்கம்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (11:17 IST)
சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரது முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுஷாந்த் தற்கொலை வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரியா தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ரியாவுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இருந்து சம்மன் விடுக்கப்பட்டு அவர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். விசாரணையில் அவர் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேல் போதைப் பொருள் வாங்கியது மற்றும் விநியோகித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை ரியாவுக்கு ஆதரவாகப் பேசிவந்த நடிகை டாப்ஸி ‘ரியா சுஷாந்துக்காக போதைப் பொருள் வாங்கியதாகதான் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷாந்த் இப்போது இருந்திருந்தால் அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். சுஷாந்த் ரியாவிடம் போதை பொருள் கேட்டு வற்புறுத்தி இருக்கலாம். அல்லது ரியா சுஷாந்தை போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாக்கி இருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்