’’இந்தி தெரியாது போடா….’’ பிரபல காமெடி நடிகர் அணிந்த டீசர் புகைப்படம் வைரல்
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:47 IST)
நேற்று முன் தினம் நான் தமிழ் பேசும் இந்தியன் …ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்டை யுவன் சங்கர் ராஜா அணிந்திருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலதரப்பினரும் கருத்துகள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நடிகர் அபி சரவணன், இந்தி தெரியாது போடா போன்ற வாசகங்கள் பிரபலமாகி வருவது தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பிரபல காமெடி நடிகர் கருணாகரன் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்ட டீசர்டை அணிந்துள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களி;ல் வைரல் ஆகி வருகிறது.