சமந்தா போல மோசமான நோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூனம் கவுர்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:15 IST)
தெலுங்கு நடிகையான பூனம் மலையாளம் , தமிழ் , தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆதலால்  தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 

கல்லூரியில் படிக்கும் போதே படவாய்ப்பு  கிடைக்க தனது 20 வயதில் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.பிறகு 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் என் தமிழ் படங்களில் நடித்தார். அழகு புதுமையான முகபாவனை கொண்டிருந்தாலும் தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 

இந்நிலையில் இவர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நூதனமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் முழ்வதும் தசைவலி மற்றும் உடல் சோர்வு ஆகியவை இருக்கும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டாக வேண்டும். தங்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும். உடல்பயிற்சி மற்றும் தெரபிகள் ஆகியவற்றின் மூலம் நோயை எதிர்கொள்ள வேண்டும். இந்த நோய் கடந்த 2 ஆண்டுகளாக பூனம் கவுருக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்