இனவெறி பிடித்த முட்டாள்.... மாளவிகாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (16:33 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரவிக்கை அணியாமல் பழங்குடியின பெண் போன்று புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தினர். அந்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு "Tribal skin" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இது தான் சமூகவலைத்தள வாசிகளை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆம்,  "Tribal skin" என்பதன் அர்த்தம் பழங்குடி நிறம். பலருக்கும் முன் உதாரணமாக இருக்கவேண்டிய நீங்களே இவ்வளவு கேவலமாக வெளிப்படையாக இனவெறி குறித்து பதிவிட்டுள்ளது வெட்கமாக இருக்கிறது என ரசிகர்கள் விளாசித்தளியுள்ளனர். அத்துடன் உங்க மேல் வைத்திருந்த  மரியாதையே போயிடுச்சி இந்திய பிரபலங்களை இந்த விஷயத்தில் மட்டும் திருத்தவே முடியாது என திட்டி தீர்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்