"அண்ணாத்த சேதி" விஜய் சேதுபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (12:30 IST)
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்த நிலையில் இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான “அண்ணாத்த சேதி..” என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.