இந்தி சினிமாவில் நேர்மை குறைவு… காஜல் அகர்வால் ஓபன் டாக்!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (10:05 IST)
தென்னிந்திய சினினாக்களின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து அவருக்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில் இப்போது சினிமாவில் மீண்டும் பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் அதிகமாக தென்னிந்திய சினிமாக்களில் நடித்ததன் மூலமாகவே பிரபலம் அடைந்தார். இதுபற்றி பேசிய அவர் “பலரும் பாலிவுட் படங்களில் நடிப்பதன் மூலம் நாடு முழுவதும் பிரபலம் கிடைக்கும் என நினைத்து அதில் நடிக்கின்றனர். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம் போன்றவை பாலிவுட்டில் குறைவுதான் எனக் கருதுகிறேன். அதனால்தான் நான் தென்னிந்திய மொழி சினிமாக்களில் நடித்தேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்