5ஜி சேவைக்கு எதிராக வழக்கு; நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு அபராதம்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:26 IST)
இந்தியாவில் 5ஜி சேவை செயல்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததற்காக நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜூஹி சாவ்லா. தற்போது ஷாரூக்கானுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் 5ஜி குறித்து நீதிமன்றத்தில் ஜூஹி சாவ்லா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் 5ஜி சேவையால் விலங்குகள், பறவைகள் மற்றும் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்பதால் அதை நடைமுறைப்படுத்தக்கூடாது என அவர் கேட்டிருந்தார்.

இந்த வழக்கில் அவரது கருத்தை விமர்சித்து நீதிபதிகள் கடுமையாக பேசினர். மேலும் ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை குறைக்கக் கோரி ஜூஹி சாவ்லா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அபராதத்தை ரூ.2 லட்சமாக குறைத்ததுடன், நீதிபதிகள் பேசிய கண்டிப்பான வார்த்தைகளையும் நீக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்