ஊரடங்கை மீறிவிட்டேன்... இதுதான் முதல் தடவை - காரணத்துடன் பதிவிட்ட அனுபமா பரமேஸ்வரன்!

Webdunia
சனி, 9 மே 2020 (09:25 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டீவாக செயல்பட்டு தொடர்சியான பதிவுகள் , டப்மாஸ் என ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார்.


இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " கொரோனா ஊரடங்கை முதன் முறையாக மீறி விட்டதாக கூறி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். அதுவும் மருத்துவமனைக்கு செல்வதற்காக என்பதை மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படத்தை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள்... பரவாயில்லை சரியான தேவைக்காக பொறுப்புடன் வெளியில் சென்றுள்ளதால் உங்களை மன்னித்து விடுகிறோம் என கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்