மீண்டும் தமிழில் அமலா… ராஷ்மிகா படத்தில் முக்கிய வேடம்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (14:03 IST)
இதுவரை 20க்கும் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் இதுவரை சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். வாரிசு படத்துக்கு தமிழ் சினிமாவில் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ரெயின்போ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் உருவாக உள்ள நிலையில் அறிமுக இயக்குனர் ஷாந்தபிரபு இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் அமலா முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இந்த படம் மூலமாக ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார் அமலா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்