பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதாவுக்கு 4 ஆண்டுகள் தடை!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:56 IST)
ஊக்க மருத்து சோதனையில் தோல்வி அடைந்த பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்தார்.

இதையடுத்து,  கடந்த குஜராத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையே தேசிய போட்டியில் நடைபெற்றன. செப்டம்பர் 30 ஆம் தேதி சஞ்சிதாவிடம் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.

இதைப் பரிசோதித்ததில், குரோஸ்டானோலோன், மெட்டபபோலைட் என்ற உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் தடை செய்ய பட்டியலில் இடம்பெற்ற ரசாயன பொருளை சஞ்சிதா பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகம் விதித்து இன்று  அறிவிப்பு வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.

இதனால், சஞ்சிதா பெற்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்படும் என்றும் அவர் விரும்பினால் 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்