முக அறுவை சிகிச்சையால் தமிழரசன் ப்ரமோஷனை தவிர்க்கும் விஜய் ஆண்டனி!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (13:58 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் கடலில் விழுந்ததால் கடல் தண்ணீரை குடித்ததால் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவரின் முக அமைப்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.

அதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள அவரின் தமிழரசன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட விஜய் ஆண்டனி கலந்துகொள்ள மாட்டார் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்