விஜய்யின் லியோ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (09:36 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் தினம் தினம் படத்தில் புதிது புதிதாக நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகிய படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அபிராமி இணைந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதை உறுதிப்படுத்துவது போல லோகேஷுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்