விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்துவரும் இந்த படத்தை அவரே இயக்கி வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி அவரே இசையமைத்து படத்தொகுப்பு பணியையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ் ஆனதை அடுத்து சிங்கப்பூரை சேர்ந்த உதவி இயக்குனர் ஒருவர் இந்த கதை தன்னுடையது எனக் கூறி இப்போது புது சர்ச்சையை உருவாக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் லிங்குசாமியிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆகியோருக்கு இந்த கதையைக் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.