30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கிய விஷால்

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (10:51 IST)
விஷால், கீர்த்தி சுரேஷ்  நடித்துள்ள `சண்டக்கோழி 2'. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா, சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குனர் ஷங்கர், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்..

 
இந்த விழாவில்,  தேர்தெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார். துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கினார்.
 
அதன் பின்னர் விழாவில் பேசிய விஷால், இன்றைய நாள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய  விஷயம் . நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நம்மை விட அதிக விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்