நடிகர் விஜய்யின் 'விஜய்66' பட முக்கிய அப்டேட்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:36 IST)
நடிகர் விஜய்யின்  'விஜய்66' பட முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'விஜய்66' திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பது மட்டுமே இப்போது வரை அதிகாரப்பூர்வமாகியுள்ள நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  மேலும் இப்படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது. மற்றொருவர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,  வரும் ஏப்ரல்2 ஆம் தேதி 'விஜய்66' படத்தின் பூஜை தொடங்கப்பட்டவுள்ளதாகவும், சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் இப்படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்