ஆர்ஜே பாலாஜி அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்: இயக்குனர் யார் தெரியுமா?

வெள்ளி, 4 மார்ச் 2022 (18:29 IST)
ஆர்ஜே பாலாஜி அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்: இயக்குனர் யார் தெரியுமா?
தமிழ் திரைப் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராக பதவி உயர்வு பெற்றார் 
 
அதன்பிறகு அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது இந்த நிலையில் வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
 
 ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கவுள்ளார்.
 
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்