விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்… திருப்புமுனையை கொடுத்த வாரிசு?

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (08:33 IST)
விஜய் மில்டன் தற்போது மழை பிடிக்காத மனிதன் மற்றும் கோலி சோடா 3 ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தையும் , கோலி சோடா 3 ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் கோலி சோடா  3 படத்தில் நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ரம்யா நம்பீசனும் இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்