திருமணத்துக்கு 5 நாட்களுக்கு முன்பாக கார் விபத்தில் சிக்கிய நடிகர்!

Webdunia
திங்கள், 29 மே 2023 (08:07 IST)
தமிழில் காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவரும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஷர்வானந்த்.

இவர் தெலுங்கு படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கு தேசம் கட்சியின் பிரமுகர் கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தி ரஷிதாவை திருமணம் செய்ய உள்ளார். அதற்கான திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் அவருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் அவர் நேற்று ஒரு கார் விபத்தில் சிக்கியுள்ளார். ஐதராபாத்தின் பில்ம் நகர் சந்திப்பில் அவர் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறூமாறாக சென்று கவிழ்ந்தது. இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் இப்படி அவர் விபத்தில் சிக்கி இருப்பது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்