நடிகர் சந்தானம் படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்..வைரலாகும் பாடல்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (17:28 IST)
காமெடி நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோவாக புரமோஷன் ஆகி தொடர்ச்சியாக ஹீரோ வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் முதல் சிங்கில் தற்போது வெளியாகியுள்ளது.

சந்தானம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘பாரீஸ் ஜெயராஜ்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஏற்கனவே சந்தானம் நடித்த ஏ1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனடு டுவிட்டர் பக்கத்தில் இப்பாடலை ரிலீஸ் செய்துள்ளார். கானா பாடலான இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்