நடிகர் பிரபு இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தமிழ் சினிமாவின் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு. இவர், தற்போது, விஜய், அஜித், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபதிதில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல், விஜய்யின் வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன், உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுக்கு சிறு நீரகத்தில் கற்கல் இருப்பதாக மருத்துவமர்கள் கூறிய நிலையில், அவருக்கு லேசர் சிகிச்சையின் மூலம் சிறு நீரகக் கற்கள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், இன்று மருத்துவ சிகிச்சை பிரபு வீடு திரும்பினார்.
சில நாட்களுக்கு ஓய்வுக்குப் பின் மீண்டும் அவர் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.