லூசு* மெண்டல்*.... தன்னை கழுவி ஊற்றிய பெண்ணை சப்புன்னு அறைந்த நகுல்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (12:40 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.
 
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுலுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருந்தாலும் தொழிலில் அப்படியே உல்ட்டாவாக இருக்கிறது. 
 
படவாய்ப்புகள் கிடைக்காததால் தொலைக்காட்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அந்தவகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நகுல்  நடுவராக இருப்பது பிடிக்காத பெண் ஒருவர் அவரின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றின் கீழ், ' லூசு பயலே, மெண்டல் பயலே என்னடா பண்ணிக்கிட்டு இருக்க பிக்பாஸ் ஜோடிகள்ல...?  மெண்டல் மாதிரி பண்ணிட்டு  இருக்குற, மூஞ்சியும் மொகரையும் செத்தப்பயலே எரிச்சலாக செஞ்சுட்டு இருக்க என்று வாய்க்கு வந்தபடி  கமெண்ட்ஸ் செய்துள்ளார். 

அந்த பெண்ணின் மோசமான கமெண்ட் பார்த்தும் கூலாக பதிலளித்துள்ள நகுல், சந்தோசமா ? இப்போ நல்லா பீல் பண்றீங்களா ? இப்படி பேசினால் என்னை ஒன்றும் செய்யப்போவது இல்லை. உன்னை நினைத்து தான் பாவமாக இருக்கிறது. உனக்கு புடிக்கவில்லை என்றால் வேற ஷோ பாரு. இது மோசமான வளர்ப்பின் அறிகுறி போய் மருத்துவரை பார் என்று அந்த பெண்ணுக்கும் மனம் வலிக்காத வகையில் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நல்ல வார்த்தைகளால் அந்த பெண்ணை சப்புன்னு அறைஞ்சுடீங்க அண்ணா சூப்பர் என ரசிகர்கள் நகுலை பாராட்டியுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்