ஒரே டைம்ல நாலு பேரை லவ் பண்ணா.... டிடியின் ப்ளீச் பதில்!

திங்கள், 17 மே 2021 (15:27 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 
 
காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார்.
 
சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். 
 
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது ரசிகர்களுடன் வந்து கலந்துரையாடுவர். அந்தவகையில் நேற்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடி இரண்டாவது காதல் பற்றி கேட்டதற்கு அதென்ன செகண்ட் லவ்.? லவ் என்ன ஒரு வாட்டி தான் வருமா? இல்ல ரெண்டு வாட்டி தான் வருமா.? லவ் நம் வாழ்க்கையில் ஒரு பார்ட். ஒரே நேரத்தில் 4 அல்லது 5 லவ் வந்தா தான் அது தப்பு. ஆனால் வாழ்க்கையில் 2 அல்லது 3 லவ் இருக்குனா அது ஒன்னும் தப்பு இல்ல" என ஓப்பனாக கூறிவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்