ஜெய் தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் பணிகளில் ஏன் கலந்து கொள்வதில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
ஜெய், வாணிபோஜன் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் டிரிப்பிள்ஸ். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று நண்பர்கள் இரண்டு கல்யாணம் ஒரே குழப்பம் என்ற கதையின் அடிப்படையில் உருவான இந்த காமெடி திரைப்படம் திரைப்படம் டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத ஜெய் டிரிபிள்ஸ் ப்ரோமோக்களில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் ஏன் இது போல விளம்பரப் பணிகளில் கலந்து கொள்வதில்லை என்று கேட்ட போது நான் சில படங்களின் கதையைக் கேட்டு பிடித்துதான் அதில் நடிக்கிறேன். ஆனால் படமாக்கப்பட்ட பின் அதில் ஏதோ குறை இருப்பது தெரிய வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் விளம்பர பணிகளில் நான் படத்தை பற்றி புகழ்ந்து பேசுவது எனக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. சராசரி மனிதன் குடும்பத்தோடு தியேட்டருக்கு செல்லும் போது ஆயிரக் கணக்கில் அவருக்கு செல்வாகிறது. அந்த செலவை வைக்க வேண்டாம் என்றுதான் நான் நினைக்கிறேன். எனக் கூறியுள்ளார்.