சின்னத்திரை நடிகர் அர்னவ் ஜாமின் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (18:36 IST)
சின்னத்திரை நடிகர் அர்னவ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 
 
சின்னத்திரை நடிகை திவ்யாவின் கணவர் சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவர் மனு அளித்தார். இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமின் மனுவை நீதிபதி விசாரணை செய்து ரத்து செய்தார்
 
ஜாமீனில் வெளிவந்தால் அர்னவ் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்