நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு: ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை!

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (12:45 IST)
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவின் விசாரணையை ஒத்தி வைக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கூறிவரும் நிலையில் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 27 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்ற நிலையில் சற்று முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது
 
இந்த விசாரணையின்போது நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்றும் அதனால் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது
 
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்