நடிகை திவ்யா புகார் எதிரொலி: சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது!

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (17:22 IST)
நடிகை திவ்யா புகார் எதிரொலி: சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது!
சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சின்னத்திரை நடிகர் அர்னவ் மற்றும் நடிகை திவ்யா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் தன்னை  அர்னவ் தாக்கியதாக நடிகை திவ்யா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து நடிகர் அர்னவ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வந்தனர்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக அர்னவ் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் பூந்தமல்லி அருகே படப்பிடிப்பில் இருந்த அர்னவ்வை மகளிர் போலீசார் கைது செய்தனர் 
 
இதனையடுத்து அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில் சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்