பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய உண்மையை உளறிய சுஜா வருணி

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (18:14 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தது. ஆனாலும் பெரும் ஹிட் அடித்து, மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதற்கு கமல் தொகுத்து வழங்கியதும் ஒரு காரணம். இந்நிலழ்ச்சியின் மூலம் ஓவியாக்கு நல்ல புகழ் கிடைத்தது.

 
இந்த நிகழ்ச்சியால் ஓவியா, ஆரவ் போன்றவர்கள் பெரும் புகழ் பெற்றார்கள். ஆனால் ஜூலி, சுஜா போன்றவர்களுக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சியது. மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களும் பிரபலம் ஆனார்கள். வெற்றிகரமாக 100 நாட்கள் முடிந்த இந்த  நிகழ்ச்சியின் இறிதி நாளில் ஆட்டம் பாட்டம் என களை கட்டியது.
 
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணிக்கு எதிர்பாராதவிதமாக பிக்பாஸ் வீட்டில் டாஸ்கின்போது காலில்  அடிபட்டது. அதனால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட சுஜா வருணி தற்போது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அதாவது கடைசி நாளில் கமல் அனைத்து  போட்டியாளர்களையும் மேடையில் வரவேற்று அழைத்தபோது சுஜா வருணியால் சரியாக நடக்க கூட முடியவில்லை. காரணம்  பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க். ஆனால் மேடையில் நடனம் ஆடியபோது நன்றாக ஆடினார். இதனை கவனித்த  ரசிகர்கள் சுஜாவை வறுத்து எடுத்து விட்டனர்.
 
இதற்கு தற்போது சுஜா வருணி விளக்கம் அளித்துள்ளார். அதில், இரண்டும் வெவ்வேறு நாளில் படமாக்கப்பட்டது. ஆனால் தொலைக்காட்சி தனது எடிட்டிங் திறமையால் மொத்தாக மாற்றி விட்டார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்