தமிழகத்தை தாக்குமா புதிய இரண்டு புயல்கள்: உண்மைநிலை என்ன?

வியாழன், 5 அக்டோபர் 2017 (13:03 IST)
தமிழகத்தை இந்த மாதம் இரண்டு புயல்கள் தாக்க உள்ளதாகவும், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் இந்த புயல்கள் கரையை கடக்க உள்ளதால் சேதம் அதிக இருக்கும் என டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாக நேற்று ஊடகங்களில் செய்தி பரவியது.


 
 
அக்டோபர் 7 மற்றும் 12 தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது எனவும், முதலாவது புயல் 11-ஆம் தேதி வாக்கிலும், 2-ஆவது புயல் 15 முதல் 20-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களிலும் கரையைக் கடக்கும் எனவும் கூறப்பட்டது.
 
இந்த தகவலால் மக்கள் அதிக பீதியடைந்தனர், இந்நிலையில் இதனை தமிழ்நாடு வெதர்மேன் மறுத்துள்ளார். இந்த செய்தி தவறானது என்றும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறி உள்ளார்.
 
வடகிழக்கு பருவமழை இன்னும் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரியவில்லை என்றும், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளில் தாழ்வழுத்தம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்