பிக்பாஸ் வீட்டிற்காக இத்தனை கோடி செலவழிக்கப்பட்டதா?

வியாழன், 5 அக்டோபர் 2017 (17:44 IST)
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுப்பாளராக களமிறங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இதில் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நிகழ்ச்சி முடிந்ததற்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

 
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கொண்டது. அதற்காக அமைக்கப்பட்ட வீடு சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஈபிவி  தீம்பார்க்கில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் உள் அலங்காரத்திற்காக மட்டும் ரூ. 2 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. அதோடு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிக்பாஸ் வீட்டின் பிரமாண்ட வடிவமைப்பும் முக்கிய காரணம். வீட்டில் நீச்சல் குளம் தொடங்கி, பெட்ரூம் என அனைத்தும்  பிரமாண்டம். லிவ்விங் ரூம் முதல் கிச்சன், கழிவறை வரை அனைத்தும் நவீனமயமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.100  நாட்களுக்காக இத்தனை கோடி செலவில் வீடா என்று பலரும் அசந்து போயுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்