வில்லங்கமான படத்தில் நடிக்கும் நித்யா மேனன்??

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (17:48 IST)
நடிகை நித்யா மேனன் வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைப்பவர். இதனாலேயே அவரது பட எண்ணிக்கை குறைவாக உள்ளது.


 
 
நித்யா மேனன் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடிக்கிறார். கடந்த ஆண்டு முடிஞ்சா இவன புடி, இருமுகன் படத்தில் நடித்தார்.
 
இந்த ஆண்டு அப்பாவின் மீசை, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பிராணா என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
 
இந்த படம் மலையாளம், தெலுங்கு கன்னடம், ஹிந்தி ஆகிய மோழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. 
 
எழுத்தாளர்கள் சுதந்திரம் மற்றும் சகிப்புதன்மை இன்மை பற்றியும் சமீபகாலமாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அரசியல் பின்னணி படமா? சமுதாய விழிப்புணர்வு படமா? என்ற சந்தேகம் தொற்றிக்கொண்டது.  
 
ஆனால் படக்குழுவினர் இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். பி.கே.பிரகாஷ் இயக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்