லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்?

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (08:55 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது. இதையடுத்து மற்ற மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் அதிகமாக தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது. அதையடுத்து இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ப்ரதீப் வேடத்தில் அமீர்கானின் மகன், ஜூனைத் கான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதாநாயகியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்