சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் இப்போது படத்துக்கான பாடல் பதிவு தற்போது நடந்து வருவதாக ஜி வி பிரகாஷ் புகைப்படத்தோடு பதிவு செய்திருந்தார்.